வாஷிங்டன்: ப்ளூட்டோவை ஆராய அமெரிக்கா அனுப்பிய விண்கலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டு பயணத்திற்குப் பின்னர் அந்த விண்கலம் ப்ளூட்டோவை நெருங்கியுள்ள நிலையில் தற்போது அதை மீண்டும் இயங்கச் செய்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். நியூ ஹாரிஸான்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலமானது தற்போது ப்ளூட்டோ கிரகத்தையும், அதன் நிலவுகளையும் நெருங்கி விட்டது. இதையடுத்து இன்று மாலை அதற்கு உயிர் கொடுத்து இயங்கச் செய்துள்ளது நாசா. நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தின் அனைத்துப் பகுதிகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், அது சரியாக செயல்படுவதாகவும் நாசா கூறியுள்ளது.
இதுகுறித்து ஆலிஸ் பெளமன் கூறுகையில், நியூ ஹாரிஸான்ஸ் நல்ல நிலையில் உள்ளது. ஆழ்ந்த விண்வெளியில் அது ப்ளூட்டோவை வேகமாக நெருஹ்கி வருகிறது. தற்போது பூமியிலிருந்து அது 3 கோடி மைல்கள் தூரத்தில் உள்ளது. அதன் ஓய்வுக்காலம் முடிந்து விட்டது. இனி அது தனது வேலையைத் தொடங்கப் போகிறது. நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்திற்கு அனுப்பப்படும் செய்தியும், அங்கிருந்து பூமிக்கு வரும் செய்தியும் வந்தடைய நான்கரை மணி நேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விண்கலத்தை நாசா ஏவியது. கடந்த 1873 நாட்களாக அது ஓய்வில் இருந்து வந்தது தற்போது அது சூரியக் குடும்பத்தின் எல்லையின் முடிவை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. இதுவரை இந்த விண்கலத்திலிருந்து 267 செய்திகள் நாசாவுக்கு வந்துள்ளன. தனது பயணத்தின்போது இந்த விண்கலமானது ஜூபிடர் கிரகத்தை 4 முறை நெருங்கிச் சென்றது. அடுத்த 7 மாதத்தில் இந்த விண்கலமானது ப்ளூட்டோவை நெருங்கி விடும். அதாவது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அது ப்ளூட்டோவை நெருங்கும். அதன் பின்னர் ப்ளூட்டோவின் படங்களையும், அதன் நிலவான சாரோனையும் அது படம் எடுத்து அனுப்பும். ப்ளூட்டோ குறித்தும் சாரோன் குறித்தும் விரிவான ஆய்வை நியூ ஹாரிஸான்ஸ் மேற்கொள்ளவுள்ளது. மேலும் ப்ளூட்டோ கிரகத்தின் இருண்ட பகுதியையும் முதல் முறையாக இந்த விண்கலம் ஆராயவுள்ளது. இந்த விண்கலத்தில் இன்பிராரெட் மற்றும் அல்ட்ராவயலட் ஸ்பெக்டோரமீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா், டெலிஸ்கோபிக் கேமரா, ஸ்பேஸ்ட் டஸ்ட் டிடெக்டர் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 7 வகையான சாதனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ப்ளூட்டோ 2300 கிலோமீட்டர் விட்டம்கொண்டது. பூமியின் நிலவை விட சிறியது. ஆனால் பூமியை விட 500 மடங்கு நிறை கொண்டது.
0 comments:
Post a Comment